ADDED : ஜூலை 05, 2024 06:42 AM

திருக்கனுார் : திருக்கனுார், கூனிச்சம்பட்டு பகுதியில் அரசுக்கு சொந்தமான இடத்தின் ஆக்கிரமிப்புகளை ஆணையர் எழில்ராஜன் தலைமையில் ஊழியர்கள் அகற்றினர்.
வில்லியனுார் சப் கலெக்டர் சோமசேகர அப்பாராவ் கொட்டாறு உத்தரவின்பேரில்,மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட திருக்கனுார் மற்றும் கூனிச்சம்பட்டு பகுதிகளில் அரசுக்கு சொந்தமான ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி கொம்யூன் ஆணையர் எழில்ராஜன் தலைமையில் நடந்தது.திருக்கனுார் போலீஸ் ஸ்டேஷன் எதிரேஅனுமதி இல்லாமல் வைக்கப்பட்டிருந்த பெட்டிக்கடை மற்றும் பால் பூத் ஆகியவை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றப்பட்டது.
தொடர்ந்து, கூனிச்சம்பட்டு கைக்கோலம் குளம் பகுதியில் ஆக்கிரமித்து இருந்த வீடு மற்றும் கொட்டகைகளை இடித்து அகற்றப்பட்டன.
இதில், கொம்யூன் உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் ஆனந்தன், திருக்கனுார் சப் இன்ஸ்பெக்டர் பிரியா உட்பட பலர் ஊழியர்கள் உடனிருந்தனர்.