/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
ADDED : ஜூலை 05, 2024 06:43 AM

நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் கம்பன் அரசு மேல்நிலைப் பள்ளியில், போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
நெட்டப்பாக்கம் காவல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி துணை முதல்வர் காமராஜ் தில்லைக்கண்ணு முன்னிலை வகித்தார்.
விரிவுரையாளர் எழில்வேந்தன் வரவேற்றார். இன்ஸ்பெக்டர் கீர்த்தி வர்மன் கலந்து கொண்டு மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகாமல், எவ்வாறு நன்றாக படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பது குறித்து பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
சப் இன்ஸ்பெக்டர் வீரபுத்திரன் போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், போக்சோ சட்டங்கள் குறித்தும் மாணவர்களுக்கு விளக்கம் அளித்தார். ஆசிரியர்கள், மாணவர்கள், நெட்டப்பாக்கம் போலீசார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நுாலகர் கலியமூர்த்தி நன்றி கூறினார்.