/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மஞ்சள் மற்றும் கிழங்கு சாகுபடி குறித்து பயிற்சி மஞ்சள் மற்றும் கிழங்கு சாகுபடி குறித்து பயிற்சி
மஞ்சள் மற்றும் கிழங்கு சாகுபடி குறித்து பயிற்சி
மஞ்சள் மற்றும் கிழங்கு சாகுபடி குறித்து பயிற்சி
மஞ்சள் மற்றும் கிழங்கு சாகுபடி குறித்து பயிற்சி
ADDED : ஜூலை 05, 2024 06:42 AM

திருக்கனுார் : திருக்கனுார் பண்ணை தகவல் மற்றும் ஆலோசனை மையம் சார்பில் விவசாயிகளுக்கான மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகள் சாகுபடி குறித்து பயிற்சி முகாம் நடந்தது.
திருக்கனுார் உழவர் உதவியகத்தில் நடந்த முகாமிற்கு வேளாண் அலுவலர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.
காரைக்கால் வேளாண் கல்லுாரி உழவியல் பேராசிரியர் நாராயணன், பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானியங்கள் குறித்தும், தோட்டக்கலை துறை உதவி பேராசிரியர் ஷார்லி மஞ்சள், மரவள்ளி, கருணை உள்ளிட்ட கிழங்கு வகைகள் சாகுபடி குறித்தும் விளக்கம் அளித்தனர்.
ஏற்பாடுகளை உதவி வேளாண் அலுவலர் திருமுருகன், தங்கதுரை மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர். வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.
முகாமில் திருக்கனுார் மற்றும் சோரப்பட்டு பகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.