/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சென்டர் மீடியன் அகற்றம்: போலீசார் விசாரணை சென்டர் மீடியன் அகற்றம்: போலீசார் விசாரணை
சென்டர் மீடியன் அகற்றம்: போலீசார் விசாரணை
சென்டர் மீடியன் அகற்றம்: போலீசார் விசாரணை
சென்டர் மீடியன் அகற்றம்: போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 17, 2024 06:44 AM
பாகூர்: கன்னியக்கோவிலில் சென்டர் மீடியனை அகற்றிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி - கடலுார் சாலையில் ஏராளமான வாகனங்கள் செல்கின்றன. இச்சாலையில் விபத்து ஏற்படும் இடங்களில், கான்கிரீட் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது.
கன்னியக்கோவில் தனியார் மதுபான கடை எதிரே அமைக்கப்பட்டு இருந்த தடுப்புச் சுவர் கடந்த சில மாதங்களுக்கு முன், அகற்றப்பட்டு வழி ஏற்படுத்தப்பட்டது.
இதனால் அங்கு விபத்து அபாயம் ஏற்பட்டதால் பல்வேறு அமைப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், மீண்டும் அங்கு இரும்பு பேரிகார்டு மூலம் தடுப்பு அமைக்கப்பட்டது.
இந்நிலையில் மதுக்கடைக்கு எதிரே இருந்த சென்டர் மீடியன் பேரி கார்டு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் மீண்டும் அகற்றப்பட்டு, சாலையோரமாக வீசப்பட்டிருந்தது.
இதனால் அங்கு மீண்டும் விபத்துக்கள் ஏற்படும் நிலை ஏற்பட்டது.
தகவலறிந்த கிருமாம்பாக்கம் தெற்கு போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்தை சென்று மீண்டும் பேரிகார்டு போட்டு பாதையை அடைத்தனர்.
அங்குள்ள சி.சி.டி.வி., கேமரா காட்சிகளை பார்வையிட்டு, சென்டர் மீடியனை அகற்றிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.