/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 7 பேரிடம் ரூ.4.23 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை 7 பேரிடம் ரூ.4.23 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
7 பேரிடம் ரூ.4.23 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
7 பேரிடம் ரூ.4.23 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
7 பேரிடம் ரூ.4.23 லட்சம் மோசடி; சைபர் கிரைம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூன் 17, 2024 06:43 AM
புதுச்சேரி: புதுச்சேரியில், 7 பேரிடம் ரூ.4.23 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, லாஸ்பேட்டை காமன் கோவில் வீதியை சேர்ந்தவர் தேவசேனா. இவருடன் மர்ம நபர், ஒருவர் பேஸ்புக் மூலம், அறிமுகமானார். அவர் தேவசேனாவின் மகனுக்கு, பரிசுப்பொருள் ஒன்றை அனுப்பி உள்ளதாக கூறியிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து தேவசேனாவிற்கு பார்சல் பரிசாக வந்த நிலையில், அந்த மர்ம நபர், அதில் நிறைய தங்கம் இருப்பதாகவும், அதற்கு வரித்தொகை செலுத்த வேண்டும் என, தெரிவித்துள்ளார். இதை நம்பி தேவசேனா, ரூ.2.21 லட்சத்தை அனுப்பி ஏமாந்தார்.
புதுச்சேரி, திலகர் நகரை சேர்ந்தவர் கவுசல்யா. அவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, வீட்டில் இருந்த படியே ஆன்லைன் மூலம் பகுதி நேர வேலை செய்து, அதிகம் சம்பாதிக்கலாம் என கூறி உள்ளார். அதை நம்பி அவரும், ரூ.50 ஆயிரம் முதலீடு செய்து ஏமாந்தார்.
காரைக்கால், ராஜா காலனியை சேர்ந்தவர் கவிதா. இவரை மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டு, நிதி நிறுவனத்தில் இருந்து பேசுவதாக கூறினார். அவரிடம், குறைந்த வட்டிக்கு, ரூ.3 லட்சம் கடன் தருவதாகவும், இதற்கு செயலாக்க கட்டணம் செலுத்த வேண்டும் என, கூறி உள்ளார். இதை நம்பி அவரும், ரூ.15 ஆயிரத்தை அனுப்பி ஏமாந்தார்.
கூனிச்சம்பேட்டை சேர்ந்த பிரபு, புதுச்சேரியை சேர்ந்த ரவீந்திரநாத் தாஸ் உள்ளிட்ட, 7 பேரிடம், மர்ம நபர்கள், 4 லட்சத்து, 23 ஆயிரத்து 533 ரூபாயை மோசடி செய்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.