/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஆலோசனை முகாம் காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஆலோசனை முகாம்
காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஆலோசனை முகாம்
காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஆலோசனை முகாம்
காவேரி மருத்துவமனையில் சிறப்பு ஆலோசனை முகாம்
ADDED : ஜூன் 17, 2024 01:15 AM

புதுச்சேரி : சென்னை காவேரி மருத்துவமனை சார்பில், புதுச்சேரி ரெயின்போ நகர் பூங்கா அருகே உள்ள காவேரி மருத்துவமனை தகவல் மையத்தில் முதுகெலும்பு நல டாக்டர் செல்வின் பிரபாகர் ஆலோசனை வழங்கினார்.
சென்னை ரேடியல் ரோட்டில் உள்ள காவேரி மருத்துவமனையின் டாக்டர் கிரிஷ் ஸ்ரீதர், அவரது மருத்துவ குழுவை சார்ந்த முதுகெலும்பு அறுவை சிகிச்சை நிபுணர் செல்வின் பிரபாகர் புதுச்சேரியில் செயல்படும் காவேரி மருத்துவமனை தகவல் மையத்திற்கு நேற்று முன்தினம் வருகை தந்தார்.
அங்கு, காலை 9:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை நோயாளிகளுக்கு முதுகு வலி, கால் வலி, பின் கழுத்து மற்றும் கழுத்து பிரச்னைகள், முதுகெலும்பு புற்றுநோய், முதுகெலும்பில் தொற்றுநோய், முதுகெலும்பு காசநோய், ஸ்கோலியோசிஸ் உள்ளிட்டவைகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
மருத்துவ முகாமிற்கு வந்த பல்வேறு தரப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும் சென்னை ரேடியல் ரோட்டில் அமைந்துள்ள காவேரி மருத்துவமனையில் பல்வேறு நோய்களுக்கு குறைந்த செலவில் அதி நவீன சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.