ADDED : ஜூலை 31, 2024 04:13 AM
புதுச்சேரி : மாகியில் பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
கேரள மாநிலம் கண்ணுார் மாவட்டம் அருகே புதுச்சேரி மாநில பிராந்தியமான மாகி உள்ளது. கேரளாவில் பெய்து வரும் கன மழை காரணமாக மாகி வழியாக செல்லும் மையழி ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மேலும் மாகியிலும் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இதனால் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. மழை காரணமாக மாகியில் உள்ள கல்வி நிறுனங்களுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.
தாழ்வான பகுதியான செம்பரா, பந்தக்கல், பள்ளூர் மற்றும் சாளரக்கராவில் விளைநிலங்களை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. தாழ்வான பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற மாகி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.