காவல் துறை கையேடு வெளியீட்டு விழா
காவல் துறை கையேடு வெளியீட்டு விழா
காவல் துறை கையேடு வெளியீட்டு விழா
ADDED : ஜூலை 31, 2024 04:13 AM

புதுச்சேரி, : புதுச்சேரி காவல் துறையின் செயல் முறை கையேடு மற்றும் காவல் துறைக்கான பாடல் வெளியீட்டு விழா, மரப்பாலம் சுகன்யா கன்வென்ஷனில் நேற்று நடந்தது.
விழாவிற்கு அமைச்சர் நமச்சிவாயம் முன்னிலைவகித்தார். விழாவை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து, காவல்துறையின் செயல்முறை கையேட்டை ெவளியிட்டு முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:
போலீசார், மிகவும் திறமையாகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும்.
போலீஸ் துறைக்கு என்றே தனியாக குறிப்பேடு மற்றும் பாடல் வெளியிடப்பட்டுள்ளது. பாடல் மூலம் போலீசாருக்கு ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்ற பின், காவல் துறையில், வேகமாக பணியிடங்கள் மற்றும் பதவி உயர்வு கொடுக்கப்பட்டுள்ளது.
பணி ஓய்வு பெற்றும் டி.ஜி.பி.,க்கு எனது பாராட்டுகள்.
இவ்வாறு முதல்வர் பேசினார்.
விழாவில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், இந்த அரசு பதவியேற்றபின் போலீஸ் துறையில் காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளது.
போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்களையும், சமூதாயத்தையும் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் போலீஸ் துறை மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்றார்.
விழாவில், சபாநாயகர் செல்வம், துணை சபாநாயகர் ராஜவேலு, அமைச்சர்கள் லட்சுமிநாராயணன், சாய் சரவணன்குமார், அரசு கொறடா ஆறுமுகம், எதிர்கட்சி தலைவர் சிவா, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், சம்பத், பிரகாஷ்குமார், லட்சுமிகாந்தன், ராமலிங்கம், டி.ஜி.பி., ஸ்ரீநிவாஸ், ஐ.ஜி., அஜித்குமார் சிங்லா , எஸ்.பி.,க்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.