ADDED : ஜூலை 31, 2024 04:13 AM
அரியாங்குப்பம் : தவளக்குப்பம் அடுத்த தானாம்பாளையம் புட்டலாய் புற்றுமாரியம்மன் கோவில் ஆடிமாத உற்சவம் , கடந்த 28ம் தேதி துவங்கியது. நேற்று அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்து வழிபட்டனர்.
நேற்று, காலை கரகம் எடுக்கும் விழாவும், மதியம் சாகை வார்த்தல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலையில் செடல் அணித்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், ஞானசேகரன் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.