Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி பழிவாங்கல் வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி பழிவாங்கல் வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி பழிவாங்கல் வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம்

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி பழிவாங்கல் வைத்திலிங்கம் எம்.பி., கண்டனம்

ADDED : ஜூலை 26, 2024 04:13 AM


Google News
புதுச்சேரி: மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி வஞ்சிக்கப்பட்டுள்ளது என வைத்திலிங்கம் எம்.பி., தெரிவித்துள்ளார்.

இது குறித்து புதுச்சேரி காங்., தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., வெளியிட்டுள்ள அறிக்கை:

மத்திய பட்ஜெட்டை பொருத்தவரை புதுச்சேரி மீண்டும் வஞ்சிக்கப்பட்டுள்ளது. இந்த பட்ஜெட்டில் புதுச்சேரிக்கு என எந்த திட்டமும் அறிவிக்கப்படவில்லை. ஒவ்வொரு பட்ஜெட்டிலும் முந்தைய ஆண்டினுடைய திருத்திய மதிப்பீட்டில் கொடுக்கப்பட்ட அல்லது செலவிடப்பட்ட தொகை அடுத்த ஆண்டு பட்ஜெட்டில் வழங்கப்படும்.

ஆனால் அதற்கு மாறாக, சென்ற ஆண்டு திருத்திய மதிப்பீட்டில் புதுச்சேரிக்கு செலவிடப்பட்ட கொடை தொகை ரூ.3,388.76 கோடி.

ஆனால், இந்தாண்டு மத்திய அரசால் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட தொகை ரூ. 3,268.99 கோடி. அதாவது சென்ற ஆண்டின் செலவிடப்பட்ட திருத்திய மதிப்பீடு தொகையை விட 120 கோடி ரூபாய் அளவுக்கு குறைத்து இந்த ஆண்டின் பட்ஜெட் மதிப்பீட்டில் ஒதுக்கப்பட்டுள்ளது.

இது முற்றிலுமாக புதுச்சேரியை வஞ்சிக்கும் செயலாகும். புதிய திட்டங்களும் இல்லை. அதே நேரத்தில் ஒதுக்கப்பட வேண்டிய கொடைத்தொகையும் குறைக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்த பட்ஜெட் புதுச்சேரியை பழிவாங்கும் செயல்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us