Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலை ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்

பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலை ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்

பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலை ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்

பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலை ராஜ்யசபாவில் செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தல்

ADDED : ஜூலை 26, 2024 04:13 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரியில் பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலை அமைக்க வேண்டும் என, செல்வகணபதி எம்.பி., வலியுறுத்தினார்.

அவர் ராஜ்யசபாவில், பேசியதாவது:

புதுச்சேரி இளைஞர்கள் வேலை வாய்ப்பு இல்லாமல் தவித்து வருகின்றனர். போதுமான நிலம் மற்றும் இதர உள்கட்டமைப்பு வசதிகள் உள்ள புதுச்சேரி அல்லது காரைக்காலில் ஒரு பெரிய பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலை அமைக்க பாதுகாப்பு துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாட்டின் பல்வேறு இடங்களுக்கு உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை சீராக கொண்டு செல்வதை உறுதி செய்வதற்காக புதுச்சேரியில் சாலை மற்றும் கடல் இணைப்பு நன்கு நிறுவப்பட்டுள்ளது.

மேலும், கிழக்கு கடற்கரை சாலை, தேசிய நெடுஞ்சாலை 45ஏ மற்றும் தேசிய நெடுஞ்சாலை 45 ஆகியவை புதுச்சேரிக்கு போதுமான சாலை இணைப்பை வழங்குகிறது. வாகன போக்குவரத்திற்கு சிக்கல் இருக்காது.

ஒரு காலத்தில் புதுச்சேரியில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டதால் பல தொழில் நிறுவனங்கள் நிறுவப்பட்டது.

இது பல வேலை வாய்ப்புகளை உருவாக்கியது மட்டுமல்லாமல் அரசுக்கு வருவாயை ஈட்டியது. 2004 ம் ஆண்டில் தொழில்துறை நிறுவனங்களுக்கு கொடுத்த சலுகைகள் திரும்பப் பெறப்பட்டதால், பல தொழில் நிறுவனங்கள் புதுச்சேரியை விட்டு வெளியேறின.

புதுச்சேரியில் எந்த வகையான தொழில்கள் தொடங்கினாலும் அனைத்து வசதிகளும் உள்ள இடமாக இருந்தும், தொழில் முனைவோருக்கு சிறப்பு சலுகைகள் இல்லாததால், புதிய தொழில் தொடங்க முதலீட்டாளர்களை ஈர்க்கவில்லை.

புதுச்சேரியில் உள்கட்டமைப்பு மற்றும் பணியாளர்கள் கிடைப்பதன் அடிப்படையில், மத்திய அரசு ஒரு சிறப்பு சலுகையாக, பாதுகாப்பு உபகரண உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை துவங்க பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us