/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல் ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்
ADDED : ஜூலை 26, 2024 04:12 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் கால்நடை டாக்டர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்கம் சார்பில், ஆதரவற்ற குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.
புதுச்சேரி, கால்நடை டாக்டர்கள் நலன் பாதுகாப்பு இயக்கம் மற்றும் அன்னை தெரேசா மக்கள் சேவை இயக்கம் ஆகியன இணைந்து, வில்லியனுார், ஒதியம்பட்டு, ஜிப்ஸி ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் 'ஸ்கூல் பேக்' மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி கால்நடை டாக்டர்கள் நலன் மற்றும் பாதுகாப்பு இயக்க தலைவர் செல்வமுத்து தலைமை தாங்கினார். அன்னை தெரேசா மக்கள் சேவை இயக்க செயலாளர் செல்வ பாண்டியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக புதுச்சேரி கால்நடைத்துறை இணை இயக்குனர் குமாரவேல், கலந்துகொண்டு பள்ளி குழந்தைகளுக்கு, ஸ்கூல் பேக் மற்றும் மாலை சிற்றுண்டி வழங்கினார்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை இயக்க நிர்வாகிகள் வெங்கடேசன், ஆதித்தன், குமரன் சிரஞ்சீவி ஆகியோர் செய்தனர்.