ADDED : ஜூலை 12, 2024 05:38 AM

நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் கொம்யூன் பஞ்சாயத்துகுட்பட்ட கிராமங்களில் தனியார் நிறுவனம் (எச்.ஆர்.ஸ்கொயர்)மூலம் குப்பைகள் அள்ளப்பட்டு வருகிறது.
இவர்களுக்கு கடந்த மூன்று மாதமாக அந்நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை.
இதனை கண்டித்து குப்பை வாரும் ஊழியர்கள் மற்றும் டிரைவர்கள் நேற்று காலை பணியை புறக்கணித்து நெட்டப்பாக்கம் சிவன் கோவில் பின்புறம்கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.குப்பை அள்ளும் தொழிலாளர்கள், டிரைவர்களுக்கு மாதம் மாதம் சம்பளம் வழங்க வேண்டும். நிலுவை சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் என, வலியுறுத்தி கோஷமிட்டனர்.