/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில் எம்.எஸ்சி., படிப்பு துவக்கம் விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில் எம்.எஸ்சி., படிப்பு துவக்கம்
விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில் எம்.எஸ்சி., படிப்பு துவக்கம்
விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில் எம்.எஸ்சி., படிப்பு துவக்கம்
விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில் எம்.எஸ்சி., படிப்பு துவக்கம்
ADDED : ஜூலை 12, 2024 05:37 AM
புதுச்சேரி: ராஜிவ்காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் முதல் முறையாக, விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில், எம்.எஸ்சி., படிப்பை துவங்குகிறது.
புதுச்சேரி பல்கலைக்கழகம் கடந்த, 2023ம் ஆண்டு அக்டோபரில், விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில் உயர்கல்வி பிரிவில், 20 மாணவர்கள் சேர, ராஜிவ்காந்தி கால்நடை கல்வி மற்றும் ஆராயச்சி நிறுவனத்தை அனுமதித்தது.
இந்நிலையில் அந்த நிறுவனத்தில், 2024-25, கல்வியாண்டு, புதுச்சேரி பல்கலையால், அங்கீகரிக்கப்பட்ட விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில், எம்.எஸ்சி., பட்டப்படிப்பானது, முதல் முறையாக துவங்கப்பட உள்ளது.
இந்தியா, உயிரி தொழில்நுட்பத்தில், உலகளவில் முதல், 12 இடங்களில் மற்றும் ஆசிய - பசிபிக் பகுதியில், மூன்றாவது இடத்தில் உள்ளது.
மேலும், நம் நாடு உயிரி தொழில்நுட்பத்தில், 30 சதவீதம் வளர்ச்சி அடையும் என எதிர்பார்க்கப் படுகிறது.
விலங்கு உயிரி தொழில்நுட்பத்தில், நிபுணத்துவம் பெற்றவர்கள், விலங்குகளில் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல் மற்றும் புதுமையான ஆராய்ச்சி மூலம், கால்நடை உற்பத்தி முன்னேற்றத்தில், முக்கிய பங்கு வகிக்க முடியும்.
வெளிநாடுகளுக்கு சென்று ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இப்பாடப்பிரிவு ஏதுவாக இருக்கும். பயோ டெக்னாலஜி, உயிர் வேதியியல், நுண்ணுயிரியல், விலங்கியல் மற்றும் விலங்கு அறிவியல் ஆகிய பாடங்களில் பி.எஸ்.சி., பட்டப்படிப்பில், தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த கல்வித்திட்டத்தில் சேருவதற்கான விவரங்கள், WWW.RIVER.EDU.IN, என்ற இணையதளத்தில் இருந்து பெறலாம். இதில் சேர, ஆன்லைன் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்க வரும் 31ம் தேதி கடைசி தேதி ஆகும்.