/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டி - 20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், புல்ஸ் அணிகள் வெற்றி டி - 20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், புல்ஸ் அணிகள் வெற்றி
டி - 20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், புல்ஸ் அணிகள் வெற்றி
டி - 20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், புல்ஸ் அணிகள் வெற்றி
டி - 20 கிரிக்கெட் போட்டி டைகர்ஸ், புல்ஸ் அணிகள் வெற்றி
ADDED : ஜூலை 12, 2024 05:40 AM

புதுச்சேரி: புதுச்சேரி சி.ஏ.பி., கிரிக்கெட் போட்டியில், நேற்றைய ஆட்டங்களில் டைகர்ஸ், புல்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.
புதுச்சேரி சி.ஏ.பி. (கிரிக்கெட்) அசோசியேஷன் ஆப் பாண்டிச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் சார்பில் 6 அணிகள் மோதும் 20 ஓவர் ஆடவர் கிரிக்கெட் போட்டி சி.ஏ.பி.-சீகெம் மைதானத்தில் நடந்து வருகிறது.
நேற்று காலை 8:00 மணிக்கு துவங்கிய போட்டியில் டைகர்ஸ் அணியும், ஷார்க்ஸ் அணியும் மோதின. முதலில் ஆடிய டைகர்ஸ் அணி 19.3 ஓவர்களில்166 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. டைகர்ஸ் அணியின் சாய் சாத்விக் 50 பந்துகளில் 63 ரன்கள் எடுத்தார்.
அடுத்து ஆடிய ஷார்க்ஸ் அணி 19.5 ஓவர்களில்153 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. ஷார்க்ஸ்அணியின் சந்தோஷ் குமரன் 19 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார்.
இதன் மூலம் டைகர்ஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டைகர்ஸ் அணியின் சாய் சாத்விக் ஆட்டநாயகன் விருது பெற்றார்.
பிற்பகல் 12:30 மணிக்கு நடந்த போட்டியில் பந்தர்ஸ், புல்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பந்தர்ஸ் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழந்து 241 ரன்கள் அடித்தது. பந்தர்ஸ் அணியின் பானு ஆனந்த் 59 பந்துகளில் 119 ரன்களும், மோகன்தாஸ் 31 பந்துகளில் 54 ரன்களும்அடித்தனர்.
பின்னர், ஆடிய புல்ஸ் அணி அதிரடியாக ஆடி 18.5 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 247 ரன்கள் அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர். புல்ஸ் அணியின் ஜே பாண்டே 45 பந்துகளில் 78 ரன்களும்,ஆனந்த் பைஸ் 28 பந்துகளில் 65 ரன்களும் அடித்து வெற்றியை தேடித்தந்தனர். புல்ஸ் அணியின் ஜே பாண்டே ஆட்டநாயகன் விருது பெற்றார்.