ADDED : ஜூன் 24, 2024 05:07 AM
புதுச்சேரி முருங்கப்பாக்கம் தீரர் சத்தியமூர்த்தி அரசு மேல்நிலை பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு யோகா பயிற்சி நடந்தது.
பயிற்சியினை, பள்ளி துணை முதல்வர் சீதா துவக்கி வைத்தார். பொறுப்பாசிரியர் திருஞான சம்மந்தம், தலைமையாசிரியர் விஜய்கணேஷ் முன்னிலை வகித்தனர். யோகா பயிற்சியாளர்கள் ஜான் பீட்டர், பாலாஜி ஆகியோர் பயிற்சி அளித்தனர். தொடர்ந்து பள்ளி மாணவர்களுக்கு யோகா பயிற்சி மேற்கொள்வதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில், விரிவுரையாளர்கள் திலகம், சிவசங்கரி, பட்டதாரி ஆசிரியர் வெங்கடேசன், பள்ளி நூலகர் அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர் கார்த்திகேயன் செய்திருந்தார்.