ADDED : ஜூன் 24, 2024 05:08 AM

புதுச்சேரி : வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே சாலையில் கொட்டிய எண்ணெய்யை தீயணைப்பு வீரர்கள் தண்ணீர் பீச்சி அடித்து சுத்தம் செய்தனர்.
புதுச்சேரி வெங்கடசுப்பா ரெட்டியார் சிலை அருகே நேற்று காலை பைக்கில் கொண்டுசென்ற நல்லெண்ணை கேன் திடீரென சாலையில் விழுந்து எண்ணெய் கொட்டியது. சாலை முழுதும் எண்ணெய் படலம் படர்ந்ததால், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள வழுக்கி விழுந்தனர்.சம்பவ இடத்திற்கு வந்த புதுச்சேரி தீயணைப்பு நிலைய வீரர்கள், தண்ணீர் பீச்சி அடித்து சாலையில் படர்ந்திருந்த எண்ணெய் படலத்தை அகற்றினர்.
அதுபோல் காலை 7:30 மணிக்கு செட்டி வீதியில் விழுந்த மரம், 9:30 மணிக்கு ஆம்பூர் சாலையில் முறிந்து விழுந்த மரங்களையும் தீயணைப்பு துறையினர் வெட்டி அகற்றினர்.