/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ குளமாக மாறிய ஏ.எப்.டி., மைதான பஸ் நிலையம் குளமாக மாறிய ஏ.எப்.டி., மைதான பஸ் நிலையம்
குளமாக மாறிய ஏ.எப்.டி., மைதான பஸ் நிலையம்
குளமாக மாறிய ஏ.எப்.டி., மைதான பஸ் நிலையம்
குளமாக மாறிய ஏ.எப்.டி., மைதான பஸ் நிலையம்
ADDED : ஜூன் 24, 2024 05:11 AM

புதுச்சேரி, : குளமாக மாறிய ஏ.எப்.டி., மைதான பஸ் நிலையத்திற்குள் சேறும் சகதியில்பயணிகள்நடந்து சென்று கடும் சிரமத்திற்கு ஆளாகினர்.
புதுச்சேரி மறைமலையடிகள் சாலையில் உள்ள ராஜிவ் காந்தி புதிய பஸ் நிலையம் இடித்து அகற்றி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ. 31 கோடி மதிப்பில், வணிக வளாகத்துடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டும் பணி கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கியது.
கட்டுமான பணி நடப்பதால் பயணிகள் பாதுகாப்பு கருதி, கடந்த 16ம் தேதி, புதிய பஸ் நிலையம் ஏ.எப்.டி., மைதானத்திற்கு மாற்றப்பட்டது. பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதி, போதிய அளவில் சுத்தமான கழிப்பறை, நிழற்குடைகள், இருக்கைகள் இல்லை, புழுதி பறப்பபதாக பயணிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு மழை பெய்தது.ஏ.எப்.டி., திடல்பஸ் ஸ்டேண்ட் குளம்போல மாறியது. பஸ் நிலையத்திற்குள் ஆங்காங்கே மழைநீர் குட்டை போலக தேங்கி நின்றது. பஸ்கள் அதில் நீந்தி செல்கிறது. தண்ணீர் தேங்கியதால் மண் சாலைகள் சேறும் சகதியுமாக மாறியது.
உள்ளூர் மக்கள் மட்டும் இன்றி வெளியூர்களில் இருந்து சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் சொந்த ஊர் திரும்பும் பயணிகள் சேறும் சகதியுமான பஸ்ஸ்டேண்ட்டிற்குள் தாவித் தாவி சென்று பஸ் ஏறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.