/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம்
ADDED : ஜூன் 24, 2024 05:06 AM

காரைக்கால் : காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் நடந்தது.
காரைக்கால் மாவட்டத்தில் சுமார் 1,200 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள பருத்தி சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கலெக்டர் அறிவுறுத்தலின் படி காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பருத்தி ஏலம் ஒவ்வொறு சனிக்கிழமை தோறும் நடத்த உத்தரவிட்டார்.
அதன்படி நேற்று முன்தினம் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் விற்பனைக்குழு
செயலாளர் செந்தில்குமார் தலைமையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் 85 குவிண்டால் பருத்தியை விவசாயிகள் கொண்டுவந்து ஏலத்தில் கலந்து கொண்டனர். பருத்தியின் தரத்திற்கேற்ப அதிக பட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.7,190-க்கும் குறைந்த பட்ச விலையாக குவிண்டால் ஒன்றுக்கு ரூ.6,289-க்கும் பருத்தி ஏலம் விடப்பட்டது. சராசரி விலையாக பருத்தி குவிண்டால் ஒன்றிற்க்கு ரூ.6,739-க்கு வியாபாரிகளால் ஏலம் மூலம் கொள்முதல் செய்தனர்.
ஏலம் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை நடைபெற இருப்பதால், பருத்தி சாகுபடி செய்யும் விவசாயிகள் அனைவரும் காரைக்கால் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடக்கும் மறைமுக ஏலத்தில் பங்கு கலந்து கொண்டு பயன்பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.