/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு
ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு
ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு
ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு போலீஸ் கொடி அணிவகுப்பு
ADDED : ஜூன் 04, 2024 05:04 AM

புதுச்சேரி : ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு பெரியக்கடை, ஒதியஞ்சாலை ரெட்டியார்பாளையம் பகுதியில் போலீஸ் கொடி அணிவகுப்பு நடந்தது.
புதுச்சேரியில் லோக்சபா தேர்தலில் பதிவான ஓட்டு எண்ணிக்கை இன்று 4ம் தேதி நடக்கிறது. ஓட்டு எண்ணிக்கை முன்னிட்டு, ஒதியஞ்சாலை மற்றும் பெரிக்கடை போலீஸ் சார்பில் கொடி அணி வகுப்பு நேற்று நடந்தது.
இன்ஸ்பெக்டர்கள் ஜெய்சங்கர், செந்தில்குமார் தலைமையில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் பயிற்சி காவலர்கள் கொண்ட குழுவினர், செஞ்சி சாலை, எஸ்.வி. பட்டேல் சாலை, அண்ணா சாலை, புஸ்சி வீதி, கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.
அதுபோல், வடக்கு போலீஸ் சார்பில் எஸ்.பி. வீரவல்லவன் தலைமையில், ரெட்டியார்பாளையம், குண்டுசாலை, கம்பன் நகர், புதுநகர் உள்ளிட்ட பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது.