Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் போலீஸ் சோதனை

தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் போலீஸ் சோதனை

தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் போலீஸ் சோதனை

தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் போலீஸ் சோதனை

ADDED : ஜூன் 04, 2024 05:05 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி, : புதுச்சேரியில் பார்சல் சர்வீஸ் மூலம் போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக வந்த தகவலை தொடர்ந்து, போதை பொருள் தடுப்பு பிரிவு போலீசார் தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

புதுச்சேரியில் போதை பொருள் நடமாட்டத்தை தடுப்பதற்காக ஆபரேஷன் திரிசூல் மூலம் புதுச்சேரி போலீசார் பஸ் நிலையம், ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பல்வேறு கடைகளில் அவ்வப்போது சோதனைகளை மேற்கொண்டு கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள பார்சல் நிறுவனத்தின் மூலம் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து போதைப்பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் தனசேகரன் தலைமையிலான போலீசார், மோப்பநாய் பைரவா உதவியுடன் 100 அடி சாலையில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் குடோனில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது வாடிக்கையாளர்கள் பதிவு செய்த பார்சல்களையும், டெலிவரி செய்ய வைக்கப்பட்டிருந்த பார்சல்களையும் ஒவ்வொன்றாக சோதனை மேற்கொண்டனர். மேலும், சந்தேகத்திற்கிடமாக பார்சல்கள் வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என ஊழியர்களிடம் அறிவுறுத்தினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us