/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி அரசு சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா புதுச்சேரி அரசு சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா
புதுச்சேரி அரசு சார்பில் கருணாநிதி பிறந்த நாள் விழா
ADDED : ஜூன் 04, 2024 05:04 AM

புதுச்சேரி, : புதுச்சேரி அரசு சார்பில் தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.
புதுச்சேரி சட்டசபையில் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி உருவ படத்திற்கு, முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், எதிர்கட்சி தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அனிபால்கென்னடி, சம்பத், செந்தில்குமார், என்.ஆர்.காங்., எம்.எல்.ஏ. பாஸ்கர், தி.மு.க., அவை தலைவர் சிவக்குமார் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
அவர்களை தொடர்ந்து, செய்தி விளம்பரத்துறை சார்பில் செயலர் கேசவன், செய்தி விளம்பரத்துறை இயக்குநர் தமிழ்செல்வன் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.