/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ விஷவாயு பலி: ஹைட்ரஜன் சல்பைடு வாயு காரணம் விஷவாயு பலி: ஹைட்ரஜன் சல்பைடு வாயு காரணம்
விஷவாயு பலி: ஹைட்ரஜன் சல்பைடு வாயு காரணம்
விஷவாயு பலி: ஹைட்ரஜன் சல்பைடு வாயு காரணம்
விஷவாயு பலி: ஹைட்ரஜன் சல்பைடு வாயு காரணம்
ADDED : ஜூன் 12, 2024 07:19 AM

விஷவாயு தாக்கி உயிரிழப்பு ஏற்பட்ட புதுநகர் பகுதியில், புதுச்சேரி மாசு கட்டுப்பாட்டு குழும உறுப்பினர் செயலர் ரமேஷ் தலைமையிலான நிபுணர்கள், பாதாள சாக்கடை மேன்ஹோல் மற்றும் உயிரிழப்பு ஏற்பட்ட வீட்டின் கழிவறையில் விஷவாயுவின் தாக்கம் எவ்வளவு உள்ளது என நவீன இயந்திரங்கள் மூலம் அளவீடு செய்தனர்.
வீட்டின் கழிவறைகளில் விஷவாயு ஏதும் தென்படவில்லை. பாதாள சாக்கடை மென்ஹோல்களை திறந்து பார்த்தபோது, அதில் வழக்கமான அளவை விட ஹைட்ரஜன் சல்பைடு வாயு அதிகமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது.
உயிரிழப்பு ஹைட்ரஜன் சல்பைடு வாயு மூலம் ஏற்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்தனர். பாதாள சாக்கடை மேன்ஹோல்களில் இருந்த ஹைட்ரஜன் சல்பைடு வாயு வெளியேற மேன்ஹோல்கள் திறந்து வைக்கப்பட்டது.