Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

இறந்தவர்கள் குடும்பத்திற்கு முதல்வர் நிவாரணம் அறிவிப்பு

ADDED : ஜூன் 12, 2024 07:19 AM


Google News
புதுச்சேரி : புதுச்சேரியில் விஷ வாயு தாக்கி இறந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி, ரெட்டியார் பாளையம், புதுநகரில், விஷ வாயு தாக்கி, 3 பேர் உயிரிழந்தனர். தகவலறிந்த முதல்வர் ரங்கசாமி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து, ஆய்வு செய்தார். தொடர்ந்து, முதல்வர் ரங்கசாமி துறை அதிகாரிகளுடன், சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில் ஆலோசனை நடத்தினார்.

சபாநாயகர் செல்வம், பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், எம்.எல்.ஏ.,கள் கல்யாண சுந்தரம், நேரு, கலெக்டர் குலோத்துங்கன், அரசு செயலர் நெடுஞ்செழியன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

முதல்வர் ரங்கசாமி கூறுகையில், 'புதுச்சேரியில் அனைத்து பகுதிகளிலும், பாதாள சாக்கடை அமைக்கும் பணிகள் முடிவடைந்து, வீடுகள் தோறும் இணைப்பு கொடுக்கும் பணி, நடந்து வருகிறது.

ரெட்டியார் பாளையம், புதுநகரில் பாதாள சாக்கடை வழியாக வீடுகளுக்கு விஷ வாயு கசிந்ததன் மூலம், 2 பெண்கள், ஒரு சிறுமியும் உயிரிழந்தனர்.

இது மிகுந்த வருத்தத்தையும், துயரத்தையும் அளிப்பதாக உள்ளது. இந்த சம்பவம் குறித்து கலெக்டரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும், உரிய ஆய்வினை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

விஷ வாயு பரவாமல் தடுக்க ரெட்டியார் பாளையம் பகுதி மட்டுமின்றி, புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் ஆய்வு செய்யப்படும். விஷ வாயு பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். விஷ வாயு தாக்கி இறந்த, 2 பெண்களின் குடும்பத்தினருக்கு தலா, ரூ.20 லட்சம், சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.30 லட்சமும் நிவாரணமாக வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us