/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசு பள்ளியில் கூடைபந்து, இறகுபந்து மைதானம் திறப்பு மத்திய அரசு பொது காப்பீட்டுக் கழக நிதியில் அமைப்பு அரசு பள்ளியில் கூடைபந்து, இறகுபந்து மைதானம் திறப்பு மத்திய அரசு பொது காப்பீட்டுக் கழக நிதியில் அமைப்பு
அரசு பள்ளியில் கூடைபந்து, இறகுபந்து மைதானம் திறப்பு மத்திய அரசு பொது காப்பீட்டுக் கழக நிதியில் அமைப்பு
அரசு பள்ளியில் கூடைபந்து, இறகுபந்து மைதானம் திறப்பு மத்திய அரசு பொது காப்பீட்டுக் கழக நிதியில் அமைப்பு
அரசு பள்ளியில் கூடைபந்து, இறகுபந்து மைதானம் திறப்பு மத்திய அரசு பொது காப்பீட்டுக் கழக நிதியில் அமைப்பு
ADDED : ஜூன் 16, 2024 05:57 AM

பாகூர்: குருவிநத்தம் அரசு பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள கூடைபந்து மற்றும் இறகுபந்து மைதானத்தின் திறப்பு விழா நடந்தது.
பாகூர் தொகுதி, குருவிநத்தம் கிராமத்தில் உள்ள பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில், மாணவர்களின் விளையாட்டு திறமையை வெளிக்கொண்டு வரும் வகையில், கூடைபந்து மற்றும் இறகு பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு நிறுவனமான பொது காப்பீட்டுக் கழகம் தனது சமூக பொறுப்புணர்வு திட்டம் மூலம் 99 லட்சத்து 14 ஆயிரத்து 940 ரூபாய் நிதி ஒதுங்கியுள்ளது.
இதில், சென்டர் பார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா என்ற நிறுவனம் மூலம் கூடைபந்து மற்றும் இறகு பந்து மைதானம் அமைக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி மாணவர்களின் கற்றல் சூழலை மேம்படுத்தும் வகையில் 364 அரசு பள்ளிகளுக்கு மாணவர்கள் அமர்ந்து படிக்கும் வகையில் புதிய பெஞ்ச், டேபிள்கள் வழங்கப்பட்டது.
கூடைப் பந்து மற்றும் இறகு பந்து மைதானத்தை, செந்தில்குமார் எம்.எல்.ஏ., பொது காப்பீட்டுக் கழகம் இயக்குனரும், பொறியாளருமான சிவக்குமார் ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.
பொது மேலாளர் ஜெயஸ்ரீ, முதன்மை கல்வி அதிகாரி மோகன், சென்டர் பார் டிரான்ஸ்பார்மிங் இந்தியா சித்ரலேகா, ரேஷ்மா ஆகியோர் வாழ்த்தி பேசினார்.
முன்னதாக, குருவிநத்தம் கிராம மக்கள், அங்குள்ள சண்டீகேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளித்து, நன்றி தெரிவித்தனர்.