ADDED : ஜூன் 16, 2024 05:58 AM

புதுச்சேரி: நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து புதுச்சேரி இளைஞர் காங்., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராஜா தியேட்டர் சிக்னலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் காங்., தலைவர் ஹர்ஷ வர்தன் தலைமை தாங்கினார். காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., கண்டன உரையாற்றினார்.
அகில இந்திய மாணவர் காங்., செயலாளர் ஸ்ரீமான் ராஜா, முன்னாள் எம்.எல்.ஏ., பாலன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வில் நடந்த முறைகேட்டிற்கு உரிய விசாரணை நடத்த வேண்டும். ரெட்டியார்பாளையம் பாதாள சாக்கடை திட்டத்தை அரசு உடனடியாக சரிசெய்து மக்கள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உட்பட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.