ADDED : ஜூன் 16, 2024 05:56 AM

புதுச்சேரி: புதுச்சேரி செயின்ட் தெரேஸ் வீதியில் உள்ள கலைக்கூடத்தில் ஓவியக் கண்காட்சி நடந்தது.
தேசிய ஓவியர் ரவி வரைந்து ஓவியங்கள் கண்காட்சியில் இடம்பெற்றன. கண்காட்சியினை அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., திறந்து வைத்து, பார்வையிட்டார். இந்திரா காந்தி மைய இயக்குனர் கோபால், கலைமாமணி தேசிய ஓவியர்கள் சுகுமாறன், கந்தப்பன், நல்லாசிரியர் அன்பழகன், நாடக இணை பேராசிரியர் ரவி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கண்காட்சியில் கடின உழைப்பாளர்களின் வாழ்க்கை முறையினை சித்தரிக்கும் வகையில் ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. ஏற்பாடுகளை ஓவியர்கள் சாந்தகுமார், எழிலரசன், வெங்கடேஸ்வரன், ராஜேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.