/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நாக் கமிட்டியின் 'ஏ' கிரேடு தரச்சான்று தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நாக் கமிட்டியின் 'ஏ' கிரேடு தரச்சான்று
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நாக் கமிட்டியின் 'ஏ' கிரேடு தரச்சான்று
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நாக் கமிட்டியின் 'ஏ' கிரேடு தரச்சான்று
தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு நாக் கமிட்டியின் 'ஏ' கிரேடு தரச்சான்று
ADDED : ஜூன் 25, 2024 05:36 AM

புதுச்சேரி : தாகூர் அரசு கலை அறிவியல் கல்லுாரிக்கு நாக் கமிட்டி, 'ஏ' கிரேடு தரச்சான்று வழங்கியுள்ளது.
நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்களின் தரநிலையை மதிப்பீடு செய்யும் தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகார குழுவான நாக் கமிட்டியானது, பல்வேறு அளவுகோல்களின் அடிப்படையில் ஆய்வு செய்து, புதுச்சேரி தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு 3.09 ஸ்கோர் மதிப்பெண்ணுடன் 'ஏ' கிரேடு தரச்சான்று வழங்கியுள்ளது.
தாகூர் அரசு கலைக்கல்லுாரி ஏற்கனவே கடந்த 2004ம் ஆண்டு 77.25 ஸ்கோர் மதிப்பெண்ணுடன் பி பிளஸ் தரச்சான்று, கடந்த 2015ம் ஆண்டு 2.34 ஸ்கோர் மதிப்பெண்ணுடன் பி கிரேடு தரச்சான்று பெற்றிருந்தது. தற்போது மூன்றாவது நாக் கமிட்டி மதிப்பீட்டில் ஏ கிரேடு பெற்று அசத்தியுள்ளது.
பாராட்டு
பசுமையான வளாகம், பொருளாதார ரீதியாக விளிம்பு நிலையில் உள்ள மாணவர்களுக்கான உயர் கல்வி வசதி, கல்லுாரி முதல்வரின் தலைமை பண்பு, நல்ல நிர்வாகத்தினை நாக் கமிட்டி பாராட்டியுள்ளது. கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்த அடல் இன்குபேஷன் திறப்பு விழாவில், நாக் கமிட்டியின் ஏ கிரேடு தர சான்றிதழை அமைச்சர் நமச்சிவாயம் வெளியிட, கல் லுாரி முதல்வர் சகிகாந்ததாஸ் பெற்றுக்கொண்டார்.
விரிவுரையாளர்பணியிடங்கள்
அமைச்சர் நமச்சிவாயம் பேசும்போது,புதுச்சேரியில் இந்த தரச்சான்றை இந்த கல்லுாரி மட்டுமே பெற்று இருக்கிறது. இது மாநிலத்திற்கு பெருமை சேர்க்கின்றது.
பேராசிரியர் எண்ணிக்கை, அடிப்படை கட்டமைப்பு, கல்வி கற்பித்தல், உட்பட 7 அளவுகோல் அடிப்படையில் இத்தரச்சான்று தரப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பம் பெறப்பட்டு பரிசீலனையில் உள்ளது. விரிவுரையாளர் பணியிடங்களில் 67 பேர் நிரப்பப்படவுள்ளது என்று குறிப்பிட்டார்.
நிகழ்ச்சியில் கல்யாணசுந்தரம் எம்.எல்.ஏ., கல்வித் துறை செயலர் ஜவகர், உயர்கல்வி இயக்குனர் அமன் சர்மா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.