/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று உடல் தகுதி சோதனை: சென்டாக் அறிவிப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று உடல் தகுதி சோதனை: சென்டாக் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று உடல் தகுதி சோதனை: சென்டாக் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று உடல் தகுதி சோதனை: சென்டாக் அறிவிப்பு
மாற்றுத்திறனாளிகளுக்கு இன்று உடல் தகுதி சோதனை: சென்டாக் அறிவிப்பு
ADDED : ஜூன் 25, 2024 05:36 AM
புதுச்சேரி, : சென்டாக்கில் விண்ணப்பித்துள்ள மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உடற் தகுதி பரிசோதனை இன்று நடக்கிறது.
சென்டாக் கன்வீனர் அமன் சர்மா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
சென்டாக்கில் மாற்றுத் திறனாளிகள் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பித்தவர்களுக்கு உடற் தகுதி பரிசோதனை அந்தந்த மாவட்ட மருத்துவ மனைகளில், கடந்த 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடந்தது.
இதில், நடந்த பரிசோதனைகள் அடிப்படையில், கடந்த 21ம் தேதி வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
நீட் அல்லாத படிப்புகளுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள், உடல் பரிசோதனைக்கு வரவில்லை.
எனவே அவர்களுக்கு வாய்ப்பு வழங்க சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதன்படி, சிறப்பு முகாம், இன்று (25ம் தேதி) புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவமனை, காரைக்கால் பொது மருத்துமனை, மாகி மற்றும் ஏனாம் மருத்துவமனைகளில் காலை 8:00 மணிக்கு நடக்கிறது.
இதுபற்றி மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.