/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரி நலப்பணி சங்க பொதுக்குழு கூட்டம் புதுச்சேரி நலப்பணி சங்க பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி நலப்பணி சங்க பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி நலப்பணி சங்க பொதுக்குழு கூட்டம்
புதுச்சேரி நலப்பணி சங்க பொதுக்குழு கூட்டம்
ADDED : ஜூன் 25, 2024 05:35 AM

புதுச்சேரி, :புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் மற்றும் கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா வில்லியனூரில் நடந்தது.
புதுச்சேரி நலப்பணிச் சங்கத்தின் தலைவர் வெற்றிவேல் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர்கள் வட்டாட்சியர் அய்யனார், வரலாற்று விரிவுரையாளர் முத்து அய்யாசாமி, வேலாயுதம், பொறியாளர் செல்வராஜ் முன்னிலை வகித்தனர். செயலர் கதிரேசன், பொருளர் ஜானகிராமன், துணைத் தலைவர் வேலுமணி, துணைச் செயலர் மகேந்திரவேலன் சங்கத்தின் எதிர்காலச் செயல்பாடுகள் குறித்து நோக்கவுரையாற்றினர்.
கண்ணதாசன் படைப்புகளில் இயற்கை என்னும் தலைப்பில் துணைச் செயலர்கள் கமலக்கண்ணன், முனியன், துணைத் தலைவர்கள் வேல்முருகன், ரமேஷ், விஜயலட்சுமி ஆகியோர் கருத்துரையாற்றினார். கண்ணதாசன் படைப்புகளில் காதல் என்னும் தலைப்பில் இணைச் செயலர்கள் ஆனந்தன், ரவீந்திரன், இணைத் தலைவர் கணபதி, மண்டல அமைப்பாளர்கள் சுகுமார், அழகேசன், தன்ராஜ் ஆகியோர் பேசினர். சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.