/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ இளம் விதவைகளுக்கு உடனே பென்ஷன் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தல் இளம் விதவைகளுக்கு உடனே பென்ஷன் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
இளம் விதவைகளுக்கு உடனே பென்ஷன் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
இளம் விதவைகளுக்கு உடனே பென்ஷன் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
இளம் விதவைகளுக்கு உடனே பென்ஷன் பி.ஆர்.சிவா எம்.எல்.ஏ., வலியுறுத்தல்
ADDED : மார் 12, 2025 06:41 AM
புதுச்சேரி : கவர்னர் உரையின் மீதான தீர்மானத்தில் பி.ஆர்.சிவா பேசியதாவது:
காரைக்கால் அரசு மருத்துவமனை தரம்கெட்டுள்ளது. காரைக்கால் மக்கள் உயர் சிகிச்சைக்காக புதுச்சேரி வர வேண்டும். இல்லையெனில், திருச்சி, தஞ்சாவூர் செல்ல வேண்டும். இதில் தஞ்சாவூர் சென்றால் சொத்துகளை விற்று தான் செல்ல வேண்டும்.
இப்படிப்பட்ட சுகாதார கட்டமைப்புகள் காரைக்காலில் உள்ளது. எனவே, காரைக்கால் மருத்துவமனையுடன் கூடிய அரசு மருத்துவ கல்லுாரியை உடனடியாக அரசு கொண்டு வர வேண்டும். 10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் மட்டுமே அரசு மருத்துவமனை கட்ட அனுமதி தரப்படும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை பயன்படுத்தி புதுச்சேரி அரசு, காரைக்காலில் அரசு மருத்துவ கல்லுாரியை மருத்துவமனையுடன் துவங்க வேண்டும். ஒன்னுக்கும் உதவாத அதிகாரிகளை காரைக்காலுக்கு மாற்றுவதை அரசு வாடிக்கையாக உள்ளது. மது பழக்கத்தினால் கணவன்கள் இறந்துவிட, காரைக்காலில் இளம் வயதிலேயே பெண்கள் விதவையாகி அனைத்தையும் தொலைவிட்டு நிற்கின்றனர்.
ஆனால் சீனியாரிட்டி அடிப்படையில் பென்ஷன் கொடுப்போம் என்கிறனர் காரைக்கால் அதிகாரிகள். அதுவும் 55 வயதில் இருந்து துவங்கி ஒவ்வொருவராக பென்ஷன் கொடுப்பார்களாம்.
இப்படி செய்தால் இளம் வயது விதவைகளுக்கு எப்போது பென்ஷன் கிடைக்கும். அதுவரை அவர்களின் வாழ்வாதாரம் என்ன ஆவது. இளம் வயதில் கணவனை இழந்துவிட்டு நிர்கதியாய் நிற்கும் பெண்களில் எதிர்காலத்தோடு விளையாட கூடாது. விண்ணப்பித்த இளம் விதவைகளுக்கு உடனடியாக பென்ஷன் தொகை வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.