/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது நாகதியாகராஜன் பேச்சு கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது நாகதியாகராஜன் பேச்சு
கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது நாகதியாகராஜன் பேச்சு
கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது நாகதியாகராஜன் பேச்சு
கவர்னர் உரை ஏமாற்றம் அளிக்கிறது நாகதியாகராஜன் பேச்சு
ADDED : மார் 12, 2025 06:41 AM
புதுச்சேரி : கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நாக தியாகராஜன் பேசியதாவது:
கவர்னர் உரையில், மாநில மக்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். மாநில அரசின் கடன் தள்ளுபடி குறைந்தபட்சம் வட்டி தள்ளுபடி அறிவிப்பு கூட இல்லை. கவர்னர் உரையில் காரைக்கால் பிராந்தியம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது.
புயலால் பாதித்த வீடுகளுக்கு இழப்பீடு வழங்கவில்லை. விவசாயிகள் கடன் தள்ளுபடியில், பெரு விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லாததால், காரைக்கால் மாவட்ட மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
காரைக்கால் அரசு மருத்துவமனையில் ரூ.10.50 கோடி செலவில் எம்.ஆர்.ஐ., ஸ்கேன் கருவி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை இயக்க டெக்னீசியன் இல்லை. கிராமப் பகுதிகளில் ஞாயிற்று கிழமைகளில் பி.ஆர்.டி.சி., பஸ்கள் இயக்கப்படுவதில்லை.
உள்ளாட்சி துறை ஊழியர்கள் அரசு ஊழியர்களாக்க வேண்டும் என பல ஆண்டாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதுகுறித்த அறிவிப்பு எதுவும் இல்லை என பேசினார்.