/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சாலை, வாய்க்கால் பணி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை சாலை, வாய்க்கால் பணி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
சாலை, வாய்க்கால் பணி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
சாலை, வாய்க்கால் பணி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
சாலை, வாய்க்கால் பணி அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ., ஆலோசனை
ADDED : ஜூலை 11, 2024 06:36 AM

புதுச்சேரி, : உருளையன்பேட்டை தொகுதியில் சாலை, வாய்க்கால் அமைத்தல் பணி குறித்து நேரு எம்.எல்.ஏ., அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் பிரிவு சார்பில் நடைபெற வேண்டிய சாலை பணி மற்றும் இருபுறம் வாய்க்கால் அமைக்கும் பணி குறித்து ஆலோசனை கூட்டம் நடந்தது. நேரு எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார்.
பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் மத்திய பிரிவு செயற்பொறியாளர் ராஜாக்கிருஷ்ணன், உதவி பொறியாளர்கள் பார்த்தசாரதி, பன்னீர்செல்வம் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், உருளையன்பேட்டை தொகுதியில் சிமென்ட் சாலை அமைத்தல், சாலையின் இருபுறமும் வாய்க்கால் அமைத்தல் பணி குறித்து ஆலோசிக்கப்பட்டது.