Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நகை மதிப்பீடு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

நகை மதிப்பீடு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

நகை மதிப்பீடு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

நகை மதிப்பீடு பயிற்சி விண்ணப்பம் வரவேற்பு

ADDED : ஜூலை 11, 2024 06:37 AM


Google News
புதுச்சேரி: புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் நகை மதிப்பீடு, தொழில்நுட்பங்கள் பயிற்சி வகுப்பிற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கூட்டுறவு மேலாண்மை நிலைய மேலாண் இயக்குனர் மாறன் செய்திக் குறிப்பு:

புதுச்சேரி அரசு கூட்டுறவு துறையின் வழிகாட்டுதலின்படி, மாநில கூட்டுறவு ஒன்றியத்தின் ஓர் அங்கமாக புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையம் இயங்கி வருகிறது.

இந்த நிறுவனம் பல்வேறு நீண்ட கால குறுக்கிய கால பட்டய, சான்றிதழ் வகுப்புகளை நடத்தி வருகிறது. நகை மதிப்பீடும் அதன் தொழில்நுட்பங்கள் பயிற்சி வகுப்பானது ஒன்றுவிட்ட சனி மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் நடைபெற உள்ளது. மொத்தம் 14 நாட்கள் நடக்க உள்ளது. பயிற்சியில் சேர்வதற்கு எட்டாம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.

பயிற்சி கட்டணம் 5 ஆயிரம் ரூபாய், தேர்வு கட்டணம் 300 ரூபாய் செலுத்தி பயிற்சியில் சேரலாம். பயிற்சிக்கான உபகரணங்கள், பயிற்சியில் சேரும் அனைவருக்கும் வழங்கப்படும். பயிற்சியில் சேர்வதற்கு வயது வரம்பு இல்லை. பயிற்சி முடித்தவர்கள் கூட்டுறவு நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள், தேசிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், நகை கடைகளில் வேலை பெறலாம். சொந்தமாகவும் தொழில் துவங்கலாம்.

இந்த பயிற்சியில் சேர விரும்புவோர் விண்ணப்ப கட்டணம் 100 ரூபாய் செலுத்தி, விண்ணப்பித்தினை புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் உள்ள புதுச்சேரி கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.

கூடுதல் தகவல்களை 0413-2220105, 2331408 என்ற எண்களில் தொடர்பு கொள்ளவும்.

இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us