ADDED : ஜூலை 11, 2024 06:42 AM

புதுச்சேரி : காமராஜர் பிறந்தநாள் விழா கலை நிகழ்ச்சியில் பங்கேற்கும் நடன மாணவிகளின் தேர்வு நிகழ்ச்சி ஜவகர் பால்பவனில் நடந்தது.
தொடக்க கல்வி துணை இயக்குனர் முனுசாமி தலைமை தாங்கினார். காமராஜர் பிறந்த நாள் விழா, மாணவர் தின விழாவாக புதுச்சேரி கல்வித்துறை சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரும் 15ம் தேதி புதுச்சேரி கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடக்கும் மாணவர் தின விழாவில் புதுச்சேரி வட்டம் 1ல் இருந்து 5 வரை உள்ள அரசு தொடக்க பள்ளி மாணவிகள் 40 பேர் பங்கேற்று கிராமிய நடனம் ஆட உள்ளனர்.
அதையொட்டி நடனமாட உள்ள மாணவிகளின் ஒத்திகை மற்றும் தேர்வு நிகழ்ச்சி புதுச்சேரி ஜவகர் பால்பவனில், தொடக்க கல்வி துணை இயக்குனர் முனுசாமி தலைமையில் நடந்தது.
இதில் தொடக்க பள்ளி ஆய்வாளர் வட்டம் 1 குலசேகரன், ஜவகர் பால்பவன் தலைமை ஆசிரியர் மணிவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.