ADDED : ஜூலை 11, 2024 06:42 AM

புதுச்சேரி, : மதகடிப்பட்டு பகுதியில் சட்டவிரோதமாக எரிசாராயம் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க அங்காளன் எம்.எல்.ஏ., டி.ஜி.பி.,யிடம் மனு அளித்தார்.
அவர் அளித்த மனுவில், திருபுவனை தொகுதி கடலுார், விழுப்புரம் எல்லையோரம் அமைந்துள்ளது. தமிழக கூலித்தொழிலாளர்கள் எல்லையோர மதகடிப்பட்டு சாராய கடைகளுக்கு அதிக அளவில் வருகின்றனர். அத்தகைய கூலி தொழிலாளர்களுக்கு, சட்டவிரோதமாக எரிசாராயம் கலந்த சாராயம் அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது.
சமீபத்தில் கூட விழுப்புரம் மாவட்டத்தில் புதுச்சேரியில் இருந்து கொண்டு சென்ற சாராயம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். எனவே, சாராய விற்பனை குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கூறப்பட்டுள்ளது.