/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஜி.எஸ்.டி.,மேல்முறையீடுகளுக்கு நிதி வரம்பை குறைக்க வேண்டும் ஜி.எஸ்.டி.,மேல்முறையீடுகளுக்கு நிதி வரம்பை குறைக்க வேண்டும்
ஜி.எஸ்.டி.,மேல்முறையீடுகளுக்கு நிதி வரம்பை குறைக்க வேண்டும்
ஜி.எஸ்.டி.,மேல்முறையீடுகளுக்கு நிதி வரம்பை குறைக்க வேண்டும்
ஜி.எஸ்.டி.,மேல்முறையீடுகளுக்கு நிதி வரம்பை குறைக்க வேண்டும்
ADDED : ஜூன் 24, 2024 04:37 AM

புதுச்சேரி, : ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் புதுச்சேரி மாநிலத்தில் சர்க்கியூட் முறையில் இயங்கும் என்று கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
புதுடில்லியில் 53-வது ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டம மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்தது.இதில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி சார்பாக, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன் கலந்து கொண்டார்.
மேலும், அமைச்சருடன் புதுச்சேரி அரசின் நிதிச்செயலர் ஆஷிஷ் மாதவ்ராவ் மோரே, புதுச்சேரி வணிகவரித்துறை ஆணையர் முகமது மன்சூர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் நடந்த விவாதங்களில் புதுச்சேரி மாநிலத்தின் சார்பாக அமைச்சர் லட்சுமிநாராயணன் கருத்துகளை முன் வைத்தார்.
ஜி.எஸ்.டி., இல் பதிவு பெறுவதற்கான ரிஸ்க் அடிப்படையிலான ஆதார் பயோ-மெட்ரிக் முன்னோடி வழிமுறையாக புதுச்சேரியில் 30.08.2023 அன்று செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. இந்த ஆதார் பயோ-மெட்ரிக் அங்கீகார வழிமுறையில் புதுச்சேரியில் இதுவரை நடைபெற்ற செயல்பாடு குறித்து அமைச்சர் லட்சுமிநாராயணன் கூட்டத்தில் விளக்கினார்.
தொடர்ந்து, ஆதார் பயோ-மெட்ரிக் அங்கீகார வழிமுறை இப்போது இந்தியா முழுவதும் படிப்படியாக செயல்பாட்டிற்கு கொண்டுவர ஜி.எஸ்.டி., கவுன்சில் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
மேலும், புதுச்சேரி மாநிலத்திற்கான ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம் புதுச்சேரி மாநிலத்தில் சர்க்கியூட் முறையில் இயங்கும் என்று கவுன்சில் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
ஜி.எஸ்.டி., மேல்முறையீட்டு தீர்ப்பாயம், உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வணிகவரித்துறையால் செய்யப்படும் ஜி.எஸ்.டி., சம்பந்தப்பட்ட மேல்முறையீடுகளுக்கு விதிக்கப்படவிருக்கும் நிதி வரம்பை புதுச்சேரி போன்ற சிறிய மாநிலங்களுக்கு குறைக்குமாறு அமைச்சர் லட்சுமிநாராயணன் விவாதத்தின் போது கோரிக்கை விடுத்தார்.
இக்கூட்டத்தில் உலோகத்திலான பால் கேன்களுக்கும், அனைத்து வகையான அட்டை பெட்டிகளுக்கும் 12 சதவீத ஜி.எஸ்.டி., வரி விதிப்பது, இந்தியன் ரயில்வேயால் வழங்கப்படும் பிளாட்பார்ம் டிக்கெட், பயணிகள் ஓய்வறை உள்ளிட்ட சேவைகளுக்கும்,
மாணவர்கள் தங்கி பயிலும் விடுதிகளுக்கும் மாதம் ரூ.20,000 வரையிலான விடுதி வாடகைக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அளிப்பது போன்ற முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.