Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ புதுச்சேரியில் தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரி தகவல்

புதுச்சேரியில் தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரி தகவல்

புதுச்சேரியில் தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரி தகவல்

புதுச்சேரியில் தலைசுற்ற வைக்கும் காய்கறி விலை அடுத்த சில மாதங்களுக்கு நீடிக்கும் என வியாபாரி தகவல்

ADDED : ஜூன் 24, 2024 04:41 AM


Google News
புதுச்சேரி, : புதுச்சேரியில் பீன்ஸ் கிலோ ரூ. 180, தக்காளி ரூ. 80 என காய்கறிகள் விலை கிடுகிடுவென உயர்ந்து உள்ளது.

புதுச்சேரிக்கு காய்கறிகள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகாவில் இருந்தே கொண்டுவரப்படுகிறது.

சமீபத்தில் பெய்த மழை காரணமாக ஆந்திரா, கர்நாடகாவில் காய்கறி விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் புதுச்சேரிக்கு வர வேண்டிய காய்கறிகள் வரத்து குறைந்து விலையும் அதிகரித்துள்ளது.

புதுச்சேரிக்கு ஆந்திரா கர்நாடகாவில் உள்ள மதனப்பள்ளி, குப்பம், வி.கோட்டா உள்ளிட்ட பகுதியில் இருந்து தக்காளி உள்ளிட்ட காய்கறிகள் வருகிறது. அங்கு பெய்து வரும் மழை காரணமாக பயிர்கள் வீணாகி உள்ளது. இதனால் வரத்து குறைந்து விலை அதிகரித்து வருகிறது.

புதுச்சேரி மார்க்கெட்டில் நேற்றுயை நிலவரப்படி, பீன்ஸ் ஒரு கிலோ ரூ. 180, தக்காளி பெரிது ரூ. 80, சிறியது ரூ. 60. கேரட் ரூ. 80, வெங்காயம் ரூ. 45, உருளைகிழங்கு ரூ. 50, முருங்கைக்காய் ரூ. 120, இஞ்சி ரூ. 150, பூண்டு கிலோ ரூ. 300, கத்திரிக்காய் ரூ. 40, பச்சை மிளகாய் ரூ. 70, முள்ளங்கி, வெண்டைக்காய் கிலோ ரூ. 40, பட்டை அவரை ரூ. 90, முட்டைகோஸ் ரூ. 40, மாங்காய் ரூ. 50, சவுசவு ரூ. 80க்கு விற்பனையானது. இப்படி கிடுகிடுவென உயர்ந்த காய்கறி விலை நடுத்தர ஏழை எளிய மக்களை தலைசுற்ற வைத்தது.

புதுச்சேரி மார்க்கெட் தக்காளி வியாபாரி சுந்தராஜன் கூறுகையில்; வழக்கமாக மழை காலங்களில் பயிர்கள் அழுகி விலைச்சல் குறைவால் காய்கறிகள் விலை அதிகரிக்கும். ஆனால் கோடை காலத்தில் பெய்த மழையால் ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் காய்கறி விலைச்சல் குறைந்ததால் காய்கறி வரத்தும் குறைந்துவிட்டது. இதனால் அனைத்து காய்கறிகளும் விலை சற்று அதிகமாக உள்ளது. வரும் வாரங்களிலும் காய்கறி விலை உயர கூடும்.

அழுகிய செடிகளை அகற்றிவிட்டு புதிய செடி நடவு பணி நடக்கிறது. அவை வளர்ந்து அறுவடை சமயத்தில் மழை காலம் துவங்கிவிடும். அதனால் அடுத்த சில மாதங்களும் காய்கறிகள் விலை அதிக அளவிலே நீடிக்க வாய்ப்பு உள்ளது என கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us