Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாட விருப்பம் தேர்வு செய்யாத மாணவர்கள் விண்ணப்பம் முதல் சுற்று ஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படாதென சென்டாக் அறிவிப்பு

பாட விருப்பம் தேர்வு செய்யாத மாணவர்கள் விண்ணப்பம் முதல் சுற்று ஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படாதென சென்டாக் அறிவிப்பு

பாட விருப்பம் தேர்வு செய்யாத மாணவர்கள் விண்ணப்பம் முதல் சுற்று ஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படாதென சென்டாக் அறிவிப்பு

பாட விருப்பம் தேர்வு செய்யாத மாணவர்கள் விண்ணப்பம் முதல் சுற்று ஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படாதென சென்டாக் அறிவிப்பு

ADDED : ஜூன் 24, 2024 04:36 AM


Google News
புதுச்சேரி : பாட விருப்பத்தை தேர்வு செய்யாத மாணவர்கள் விண்ணப்பம் முதல் சுற்று சீட் ஒதுக்கீட்டில் பரிசீலிக்கப்படாது என சென்டாக் அறிவித்துள்ளது.

புதுச்சேரியில் சென்டாக்கில் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கு கடந்த 14ம் தேதி திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. அதையடுத்து, கடந்த 19ம் தேதி ஆட்சேபனை பெறப்பட்டது. அதன் அடிப்படையில், திருத்தம் செய்யப்பட்ட வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதனை தொடர்ந்து, விண்ணப்ப தாரர்களிடமிருந்து பெறப்பட்ட ஆட்சேபனை அடிப்படையில் நேற்று முன்தினம் திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் சென்டாக் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், விளையாட்டு வீரர்கள், மாற்றுத்திறனாளிகளின் மற்றும் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு இடங்களுக்கான வரைவு தரவரிசை பட்டிலும் வெளியிடப்பட்டுள்ளது.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களின் சரிபார்ப்பு நிலை, அந்தந்த விண்ணப்பதாரரின் டேஷ் போர்டில் உள்ளது.

அதில், ஏதேனும் ஆட்சேபனை இருந்தால், வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் தெரிவிக்கலாம்.

இது தொடர்பாக விண்ணப்பதாரர்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில், நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்கான முதல் சுற்று சீட் ஒதுக்கீட்டிற்கு தேவைப்பட்டால், வரும் 25ம் தேதி மாலை 5:00 மணிக்குள் விண்ணப்ப தாரர்கள் தங்களது பாட விருப்ப தேர்வுகளை புதுப்பிக்கலாம்.

பாட விருப்ப தேர்வுகளை காலியாக வைத்துள்ள விண்ணப்ப தாரர்கள் முதல் சுற்று சீட் ஒதுக்கீட்டிற்கு பரிசீலிக்கப்பட மாட்டார்கள்.

மேலும், பி.எஸ்.சி., நர்சிங் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை பொது நர்சிங் நுழைவுத் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும். என சென்டாக் ஒருங்கிணைப்பாளர் அமன் சர்மா தெரிவித்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us