/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மூதாட்டி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை மூதாட்டி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
மூதாட்டி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
மூதாட்டி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
மூதாட்டி தற்கொலை முயற்சி போலீசார் விசாரணை
ADDED : ஜூன் 24, 2024 04:36 AM
பாகூர் : மூதாட்டி எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருமாம்பாக்கம் அடுத்துள்ள மதிக்கிருஷ்ணாபுரம் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர்ஆதிலட்சுமி 64; இவர் முள்ளோடை - பரிக்கல்பட்டு சாலையில் பெட்டிக்கடை வைத்துள்ளார்.
இவரது கடைக்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த மண்ணாங்கட்டி மனைவி குணசுந்தரி மற்றும் அவரது மகன் ராஜா ஆகியோரும் பெட்டி கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், கடந்த 21ம் தேதி ஆதிலட்சுமிக்கும், குணசுந்தரிக்கும் இடையே குப்பை கொட்டுவது தொடர்பா வாய்தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில், குணசுந்தரியும், அவரது மகன் ராஜாவும் சேர்ந்து, ஆதிலட்சுமியை திட்டி தாக்கியுள்ளார். பொது இடத்தில் தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், மனமுடைந்த ஆதிலட்சுமி எலி பேஸ்டை சாப்பிட்டு தற்கொலை முயன்றுள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு கிருமாம்பாக்கம் தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த புகாரின் பேரில் கிருமாம்பாக்கம் போலீசார், குணசுந்தரி அவரது மகன் ராஜா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.