/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பிற்கான நேர்காணல் மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பிற்கான நேர்காணல்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பிற்கான நேர்காணல்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பிற்கான நேர்காணல்
மணக்குள விநாயகர் கல்லுாரியில் வேலை வாய்ப்பிற்கான நேர்காணல்
ADDED : ஜூன் 12, 2024 02:15 AM

புதுச்சேரி : புதுச்சேரி மதகடிப்பட்டு மணக்குள விநாயகர் பொறியியல் கல்லுாரியில் சென்னை கன்டென்ட் ஸ்டாக் நிறுவனம் மூலம் வேலைவாய்பிற்கான நேர்காணல் நடந்தது.
இந்த நேர்காணலில் இக்கல்லுாரியில் 2 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு, மாதம் 98 ஆயிரம் சம்பளத்தில், ஆண்டிற்கு 11.77 லட்சம் சம்பளத்தில் தேர்வு செய்யப்பட்டு கல்லுாரிக்கும், பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.
மாணவர்களை மணக்குள விநாயகர் கல்விக் குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன், துணைத் தலைவர் சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன், பொருளாளர் ராஜராஜன், கல்லுாரி இயக்குனர் வெங்கடாசலபதி ஆகியோர் பாராட்டினர்.
வேலை வாய்ப்பானது கல்லுாரி வேலை வாய்ப்புத் துறை டீன் கைலாசம் மற்றும் அனைத்துத் துறை வேலை வாய்ப்பு ஒருங்கிணைபாளர்கள் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
வேலை வாய்ப்பு பெற்ற மாணவர்களை அனைத்து டீன்கள், துறைத் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டினர். கல்லுாரியில் பல நிறுவனங்கள் வளாக நேர்காணலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.