ADDED : ஜூன் 12, 2024 02:15 AM
பண்ருட்டி, : பண்ருட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்ததில் நான்கு பெண்கள் காயமடைந்ததனர்.
பண்ருட்டியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 7:00 மணி அளவில் ஆட்டோ ஒன்று அண்ணா கிராமம் அடுத்த சாலை நகர் பகுதிக்கு சென்றது. பாலுார் அகரத்தை சேர்ந்த ரமேஷ்,33; ஓட்டி சென்றார். பக்கிரிப்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது பன்றி மீது மோதி ஆட்டோ கவிழ்ந்தது.
இதில் ஆட்டோவில் பயணம் செய்த சாலை நகர் வேதமூர்த்தி மனைவி ராஜலட்சுமி,38; பன்னீர்செல்வம் மனைவி விஜயசுந்தரி,40; கீழ்கவரப்பட்டு ரமேஷ் மனைவி சோலையம்மாள்,31; ஆண்டிப்பாளையம் மணி மனைவி மீனா,40; ஆகியோர் படுகாயமடைந்தனர். டிரைவர் ரமேஷ் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் 4 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையிலான போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.