நான்கு பேரிடம் ரூ.94 ஆயிரம் மோசடி
நான்கு பேரிடம் ரூ.94 ஆயிரம் மோசடி
நான்கு பேரிடம் ரூ.94 ஆயிரம் மோசடி
ADDED : ஜூன் 12, 2024 02:15 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் நான்கு பேரிடம் 94 ஆயிரம் ரூபாயை மோசடி செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி, மணப்பட்டு பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு தனியார் நிறுவன மூலம் ரூ.1 லட்சம் கடன் வழங்குவதாக கூறி, முதல் தவணையாக ரூ.51 ஆயிரம் மட்டும் அனுப்பிவிட்டு, மீதி தொகையை அனுப்பாமல் ஏமாற்றியுள்ளனர்.
தேங்காய்த்திட்டை சேர்ந்தவர் பரத், ஆன்லைன் மூலம் அதிக பணம் சம்பாதிக்கலாம் என, மர்ம நபர் கூறியதை நம்பி, 20 ஆயிரம் ரூபாய் முதலீடு செய்து ஏமாந்தார். காரைக்கால் கோட்டுச்சேரியை சேர்ந்தவர் சிவசங்கர். இவரின் பெயரில் போலியாக பேஸ் புக் கணக்கை துவக்கி, அவரின் நண்பரின் அவசர தேவைக்கு பணம் வேண்டும் என வந்த தகவலை நம்பி, 15 ஆயிரம் ரூபாய் அனுப்பி ஏமாந்தார்.
தேங்காய்த்திட்டு வசந்தம் நகரை சேர்ந்த எடிசன் ஆன்லைன் மூலம் வேலை தேடியுள்ளார். அதில் வந்த லிங்கை கிளிக் செய்து, வங்கி விபரங்களை பதிவு செய்த, அடுத்து நிமிடத்தில் 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. இதுகுறித்த புகார்களின் பேரில், சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.