/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ செத்தவரை சொக்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம் செத்தவரை சொக்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
செத்தவரை சொக்கநாதர் கோவிலில் நாளை மகா கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 01, 2024 06:15 AM

செஞ்சி : செஞ்சி அடுத்த செத்தவரை சிவஜோதி மோன சித்தர் பீடத்தில் உள்ள மீனாட்சி அம்மன் உடனுறை சொக்கநாதர் கோவிலில் நாளை 2ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது.
அதனையொட்டி, நேற்று காலை கோபூஜை, திருவிளக்கு வழிபாடு, கணபதி ஹோமம், திருமுறை பாராயணமும், மதியம் நிலத்தேவர் வழிபாடு, காப்பு கட்டுதல், லட்சுமி ஹோமம், மாலை கால வேள்வி பூஜை நடந்தது.
இன்று காலை 5:00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி, இரண்டாம் கால வேள்வி பூஜை, மாலை 6:00 மணிக்கு திருவிளக்கு வழிபாடு மற்றும் மூன்றாம் கால வேள்வி பூஜை நடக்கிறது. நாளை 2ம் தேதி காலை 6:00 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை, சிவஜோதி மோன சித்தர் தலைமையில் பரிவார தெய்வங்களுக்கு திருக்குட நன்னீராட்டு, தொடர்ந்து 8:00 மணிக்கு நாடி சந்தானம், கலச புறப்பாடு, 9:30 மணிக்கு விமான கலச கும்பாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து 10:00 மணிக்கு மீனாட்சியம்மன், சொக்கநாதருக்கு திருக்குட நன்னீராட்டு நடக்கிறது.
பகல் 1:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், பிற்பகல் 3:00 மணிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை சிவஜோதி மோன சித்தர் மற்றும் ஆசிரம டிரஸ்டிகள் செத்தவரை, நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.