/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ டாக்டர் ஆவது எப்படி இலவச கருத்தரங்கு டாக்டர் ஆவது எப்படி இலவச கருத்தரங்கு
டாக்டர் ஆவது எப்படி இலவச கருத்தரங்கு
டாக்டர் ஆவது எப்படி இலவச கருத்தரங்கு
டாக்டர் ஆவது எப்படி இலவச கருத்தரங்கு
ADDED : ஜூன் 01, 2024 06:14 AM
புதுச்சேரி : டாக்டராவது எப்பது என்பது குறித்த இலவச கருத்தரங்கம், லிம்ரா நிறுவனம் சார்பில் இன்றும், நாளையும் விழுப்புரம், கடலுார் மற்றும் புதுச்சேரியில் நடக்கிறது.
லிம்ரா ஓவர்சீஸ் எஜூகேஷன் நிறுவனம் சென்னையில் 22 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. வெளிநாட்டில் மருத்துவ கல்வி படிக்க இந்நிறுவனம் வழிகாட்டி வருகிறது. இதுவரை, 1,750 மாணவர்களை வெளிநாட்டில் உள்ள மருத்துவ கல்லுாரிகளில் சேர்த்துள்ளனர்.
சமீபத்தில் நீட் தேர்வு முடிந்த நிலையில், மாணவர்கள் எங்கு எம்.பி.பி.எஸ்., படிப்பது. நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்றால், டாக்டருக்கு படிக்க முடியுமா, என்ற குழப்பங்கள், மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் எழுந்துள்ளது.
வெளிநாட்டில் மருத்துவம் படிக்க கட்டாயம் நீட் தேவையா? பிளஸ் 2 தேர்வில் எந்த பாடப்பிரிவில், எவ்வளவு மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பாதுகாப்பு, எவ்வளவு பணம் செலவாகும், வெளிநாட்டில் மருத்துவம் படிக்க எத்தனை ஆண்டுகள் ஆகும். அங்கு படித்த மருத்துவ மாணவர்கள் இந்தியாவில் அரசு மருத்துவராக பணியாற்ற முடியுமா உள்ளிட்ட சந்தேகங்களை, அறிய லிம்ரா நிறுவனம் இலவச கருத்தரங்கு நடத்துகிறது.
இந்த கருத்தரங்கு, இன்று 1ம் தேதி விழுப்புரம் - பாண்டி ரோடு, மகாலட்சுமி பிளசா 3வது தளத்தில் மாலை 5:00 மணிக்கு நடக்கிறது. நாளை 2ம் தேதி காலை 10:30 மணிக்கு கடலுார் மஞ்சக்குப்பம் ஓட்டல் ஆற்காட் உட்லண்சிலும், மாலை 4:30 மணிக்கு புதுச்சேரி எஸ்.வி., பட்டேல் சாலையில் உள்ள ஓட்டல் 'ஆனந்தா இன்'னில் நடக்கிறது.
மேலும் விபரங்களுக்கு 94454 83333, 94457 83333, 99763 00300 ஆகிய மொபைல் எண்களில் தொடர்பு கொள்ளவும்.