ADDED : ஜூலை 08, 2024 04:10 AM
நெட்டப்பாக்கம்: ராம்பாக்கம் வெற்றிவேல் முருகன் வள்ளி தெய்வாணை கோவில் கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
கும்பாபிேஷக பூஜைகள் நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று காலை 7.00 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, 9:30 மணிக்கு பட்டு வஸ்தர ஹோமம் நடந்தது. 9:45 மணிக்கு கடம் புறப்பாடாகி, கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிேஷகம் நடந்தது.
தெடார்ந்து, 10:15 மணிக்கு மூலவர் கும்பாபிேஷகமும், மகா தீபாராதனை நடந்தது. திரளான பொதுமக்கள் தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.