/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ சொர்ணவாரி பருவ சாகுபடி பணி தீவிரம் சொர்ணவாரி பருவ சாகுபடி பணி தீவிரம்
சொர்ணவாரி பருவ சாகுபடி பணி தீவிரம்
சொர்ணவாரி பருவ சாகுபடி பணி தீவிரம்
சொர்ணவாரி பருவ சாகுபடி பணி தீவிரம்
ADDED : ஜூலை 08, 2024 04:10 AM

புதுச்சேரி: புதுச்சேரி பகுதிகளில், சொர்ணவாரி பருவதிற்கான நெல் நடவு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
புதுச்சேரியில் 13,124 ஹெக்டேர் பரப்பில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு, சொர்ணவாரி, சம்பா, நவரை என மூன்று போகத்தில் நெல் பயிரிடப்பட்டு வருகிறது.
புதுச்சேரியின் நெற்களஞ்சியமான பாகூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் 2,000 ஏக்கர் பரப்பில் நெல் சாகுபடி நடந்து வருகிறது. தற்போது குறுகிய காலம் கொண்ட (ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ) சொர்ணவாரி பருவம் துவங்கி உள்ளது. அதையொட்டி, பாகூர் மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதியில் நெல் நாற்று நடவு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
குறுகிய கால பயிர் என்பதால், நெல் ரகங்களான கோ-50, ஐ.ஆர். 51, ஆடுதுறை குண்டு 37, அம்பாசமுத்திரம் (ஏ.எஸ்.டி) 16, 90 நாட்களில் அறுவடைக்கு தயாராகும் நெல்லுார் (என்.எல்.ஆர்) -90 ரகங்களை அதிக அளவில் பயிரிட்டு வருகின்றனர்.
நடவு பணிக்கு விவசாய கூலி தொழிலாளர்கள் கிடைக்காததால், 80 சதவீத விவசாய நிலங்களில் இயந்திர நாற்று நடவு செய்யப்படுகிறது.