/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ ஆட்டோவில் இருந்த நகை பையை ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு ஆட்டோவில் இருந்த நகை பையை ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
ஆட்டோவில் இருந்த நகை பையை ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
ஆட்டோவில் இருந்த நகை பையை ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
ஆட்டோவில் இருந்த நகை பையை ஒப்படைத்த டிரைவருக்கு பாராட்டு
ADDED : ஜூன் 14, 2024 06:08 AM

புதுச்சேரி: ஆட்டோவில் தவறவிட்ட நகை பையை உரியவரிடம் ஒப்படைத்த டிரைவரின் நேர்மையை போலீசார் பாராட்டினர்.
சென்னை, திருவல்லிக்கேணி சேர்ந்தவர் பிரசாத், 33; தொழிலதிபர். இவர் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து புறப்பட்டு புதுச்சேரியில் நடக்கும் திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவு 9:30 மணிக்கு புதுச்சேரி புதிய பஸ் நிலையத்தில் பஸ்சை விட்டு இறங்கி அங்கிருந்து, ஒரு ஆட்டோவில் இ.சி.ஆர்., சாலையில் உள்ள திருமண மண்டபத்திற்கு சென்றனர்.
அவர்கள் கொண்டு வந்த பை ஆட்டோவில் மறந்து வைத்துவிட்னர். அந்த பையில் தங்க நெக்லஸ் மற்றும் பட்டு புடவைகள் இருந்தது. பதறிபோன, அவர்கள் திருமண நிலையத்தில் இருந்து லாஸ்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு சென்று நடந்த விபரத்தை போலீசாரிடம் தெரிவித்தனர்.
அப்போது அங்கு ஆட்டோ டரைவரும் அந்த பையுடன் வந்தார். அதனை தவறவிட்டவர்களிடம் ஒப்படைத்தார். அந்த பையில் 10 சவரன் நகைகள், மற்றும் பட்டு புடவைகள் இருந்தன.
தங்க நகையுடன் இருந்த பையை ஒப்படைத்த, புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சடகோபனை, லாஸ்பேட்டை இன்ஸ்பெக்டர் வெங்கடாசலபதி, சப் இன்ஸ்பெக்டர் பாஷா ஆகியோர் பாராட்டினர்.