Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ 10 ஓவர் கிரிக்கெட்; 3 அணிகள் வெற்றி

10 ஓவர் கிரிக்கெட்; 3 அணிகள் வெற்றி

10 ஓவர் கிரிக்கெட்; 3 அணிகள் வெற்றி

10 ஓவர் கிரிக்கெட்; 3 அணிகள் வெற்றி

ADDED : ஜூன் 14, 2024 06:09 AM


Google News
Latest Tamil News
புதுச்சேரி: 10 ஓவர் கிரிக்கெட்டி போட்டியில், ஸ்மாஷர்ஸ், அவென்ஜர்ஸ் மற்றும் டைட்டன்ஸ் அணிகள் வெற்றி பெற்றன.

கிரிக்கெட் அசோசியேஷன் ஆப் புதுச்சேரி மற்றும் டி.சி.எம். நிறுவனம் இணைந்து நடத்தும், 8 அணிகள் பங்கு பெறும், கிரிக்கெட் போட்டி, நேற்று சி.ஏ.பி., சீகெம் மைதானத்தில் துவங்கியது.

போட்டி துவக்க நிகழ்ச்சியில், சி.ஏ.பி., நிறுவனத் தலைவர் தாமோதரன், பத்மா, கவுரவ செயலாளர் ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

காலை 8:30 மணிக்கு நடந்த முதல் போட்டியில், ஈகிள்ஸ் மற்றும் ஸ்மாஷர்ஸ் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பேட்டிங் செய்த ஈகிள்ஸ் அணி 10 ஓவர்கள் 5 விக்கெட் இழந்து 81 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய ஸ்மாஷர்ஸ் அணி 7.5 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து, 86 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. 23 பந்துகளில் 50 ரன்களை அடித்து ஆட்டநாயகன் விருதை, ஸ்மாஷர்ஸ் அணி ராகவன் தட்டி சென்றார்.

அடுத்து 11:30 மணிக்கு நடந்த, இரண்டாவது போட்டியில், அவென்ஜர்ஸ் மற்றும் பேட்ரீயாட்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய பேட்ரீயாட்ஸ் அணி, 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழந்து 102 ரன்கள் எடுத்தது.

அடுத்து ஆடிய அவென்ஜர்ஸ் அணி, 1 விக்கெட் மட்டும் இழந்து, 8.5 ஓவர்களில், 103 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. 26 பந்துகளில் 64 ரன்கள் அடித்த அவென்ஜர்ஸ் அணியின் அஜய் ரோஹினா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

மதியம் 2:00 மணிக்கு நடந்த, மூன்றாவது போட்டியில் டைட்டன்ஸ் மற்றும் வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய டைட்டன்ஸ் அணி, 10 ஓவர்களில், 3 விக்கெட்டுகள் இழந்து 173 ரன்கள் எடுத்தது.

வாரியர்ஸ் அணி, 10 வர்களில் 9 விக்கெட்டுகள் இழந்து 98 ரன்கள் எடுத்து, தோல்வியடைந்தது. 32 பந்துகளில் 86 ரன்கள் விளாசிய டைட்டன்ஸ் அணியின் பிரவீன் ஆட்டநாயகன் விருது வென்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us