/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பஸ் நிலையம் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு இடம் மாறுகிறது: 3 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டம் பஸ் நிலையம் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு இடம் மாறுகிறது: 3 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
பஸ் நிலையம் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு இடம் மாறுகிறது: 3 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
பஸ் நிலையம் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு இடம் மாறுகிறது: 3 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டம்
பஸ் நிலையம் 16ம் தேதி முதல் ஏ.எப்.டி., திடலுக்கு இடம் மாறுகிறது: 3 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டம்

என்ன வசதிகள்
ஏ.எப்.டி., திடலில் பஸ்சுக்காக காத்திருக்கும் பயணிகளுக்கு 40 அடி அகலம், 100 நீளத்தில்இரண்டு பிரமாண்டமான நிழற்குடைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர் வசதிக்காக மூன்று இடங்களில் ஆர்.ஓ.,யூனிட் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
பார்க்கிங்
ஏ.எப்.டி., பஸ் நிலையம் வரும் பயணிகள்தங்களுடைய வாகனங்களை பார்க்கிங் செய்ய சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் பார்க்கிங் செய்ய போதிய இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆட்டோ, டெம்போக்கள் வந்து செல்வதற்காக தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது.
முன் பதிவு
பி.ஆர்.டி.சி., எஸ்.இ.டி.சி.,டி.என்.எஸ்.டி.சி., ஆகிய போக்குவரத்து கழக பஸ்கள் முன் பதிவு செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மூன்று கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே அலைச்சல் இல்லாமல் முன் பதிவு செய்யலாம்.
வருகிறது தடை
கடலுார் சாலை எப்போதும் பிசியாகவே இருக்கும் சூழ்நிலையில் ஏ.எப்.டி.,திடலுக்கு புது பஸ் நிலையம் மாற்றப்பட உள்ளதால் அச்சாலை கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கும்.